Sunday, 24 February 2013

தமிழர் பயன்பாட்டுப் பொருட்கள்

ஊதாமனை :

ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள் அல்லது மரப்பொடிகள்இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போது (எரிக்கப்படும் போது) எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக்குழல் போன்ற அமைப்பில் காணப்படும். எனவே இது ஊதுகுழல் எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் ஒரு முனையில் விசையுடன் காற்றினை வாய்வழியாக லேசாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குள் பல முறை ஊதுவர். இதானல் லேசாக எரிந்து (கனன்று) கொண்டிருக்கும் தீயானது மேலும் நன்கு எரியவதற்கான காற்று அடுப்பிற்குள் செலுத்தப்பட்டு தீ நன்கு எரியும்.

இரட்டைச் சூட்டடுப்பு:

இரண்டு பாத்திரம் வைத்துச் சமைக்கக்கூடிய அடுப்பு. இரட்டைச் சூட்டடுப்பு என்றழைக்கப்பட்ட இந்த அடுப்பு ஒருபுறம் விறகு வைத்து எரித்தால் இருபுறம் நெருப்பு வரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

பன்னீர் செம்பு :

பன்னீர் செம்பு என்பது கிண்ணத்தைப் போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு காணப்படும். இதற்குள் வாசனை கலந்த நறுமண நீர் ஊற்றி வைக்கப் படும்.அந் நறுமண நீரைப் பன்னீர் என அழைப்பர். அதனால் இப்பாத்திரத்துக்கு பன்னீர் செம்பு என்பது பெயராயிற்று. சுப தினத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம், கற்கண்டு கொடுத்து அவர்களை உபசரித்தல் மரபாகும்.

உலக்கை:

உலக்கை என்பது உரலில் மாவு இடித்தல், தானியங்களில் இருந்து உமியை நீக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படும், மரத்தாலான ஒரு மெல்லிய உருளை வடிவான தண்டு ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

திருகை :

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக்கருங்கல்லினால் செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment